சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு

லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது;

Update:2023-08-16 22:15 IST

புதுடெல்லி,

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் 33 நாட்களாக தனது நிலவின் பயணத்தை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டபடி 40 நாட்கள் பயணத்துக்கு பிறகு வருகிற 23-ந்தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இன்று காலை 8.30 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தின் உயரத்தை 100 கிலோ மீட்டராக குறைக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

லேண்டர் கேமரா மூலம் ஆகஸ்ட் .9ம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. புகைப்படம் எடுத்திருப்பதன் மூலம் லேண்டரில் உள்ள கேமரா சோதனையும் முடிந்துள்ளது. லேண்டரில் உள்ள கிடைமட்ட வேக கேமரா மூலம் நிலவின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்