பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி சந்திரசேகர ராவ் மகள் டெல்லியில் உண்ணாவிரதம்

நாடாளுமன்ற, சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இன்னும் கனவாகத்தான் உள்ளது.

Update: 2023-03-10 20:45 GMT

புதுடெல்லி, 

நாடாளுமன்ற, சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இன்னும் கனவாகத்தான் உள்ளது. இந்த கனவு நனவாக நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லியில் 10-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவருமான கவிதா அறிவித்திருந்தார்.

மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் இன்று (11-ந் தேதி) அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் விசாரணைக்காக ஆஜராக உள்ள நிலையில் கவிதா, டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தொடங்கிவைத்தார். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்திலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்