ரெயில்வே பாதுகாப்பு படையில் ஆட்சேர்ப்புக்கு அறிவிப்பு வெளியிடவில்லை மத்திய அரசு தகவல்
ரெயில்வே பாதுகாப்பு படையில் 19 ஆயிரத்து 800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு குறித்து சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் கற்பனையான செய்தி பரப்பப்படுகிறது.
ஜன.11-
கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு தொடர்பாக வெளியான தகவல்களை மறுத்து ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரெயில்வே பாதுகாப்பு படையில் 19 ஆயிரத்து 800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு குறித்து சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் கற்பனையான செய்தி பரப்பப்படுகிறது. ரெயில்வே பாதுகாப்புப்படையோ அல்லது ரெயில்வே அமைச்சகமோ தங்களது அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது எந்த அச்சு, மின்னணு ஊடகம் மூலமாகவும் அத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை என்பது இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
எனவே அந்த தகவல் போலியானது. அனைவரும் அதை புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.