காவிரி விவகாரம்: நாளை டெல்லி செல்கிறார் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் நாளை டெல்லி செல்லவுள்ளனர்.

Update: 2023-09-19 14:11 GMT

பெங்களூரு,

காவிரி விவகாரம் தொடர்பாக புதுடெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேசிய பிறகு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, காவிரியிலிருந்து கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தர வேண்டிய நீர் குறித்து மத்திய மந்திரியிடம் விளக்கிக் கூறினோம் என்றும், காவிரியில் கர்நாடக மாநிலத்திடம் போதுமான தண்ணீர் இருந்தும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது என்றும் கூறினார்.

இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் நாளை டெல்லி செல்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் நாளை அனைத்து கட்சி எம்.பி.க்களுடன் சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆலோசிக்கின்றனர். காவிரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தையும் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதை பிரதமரிடம் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு வலியுறுத்த உள்ளது. அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் மத்திய நீர்வளத்துரை மந்திரியை சந்தித்த நிலையில், தற்போது கர்நாடக தரப்பினர் நாளை டெல்லி செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Tags:    

மேலும் செய்திகள்