கர்நாடகாவில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்துள்ளனர்.

Update: 2023-09-04 05:19 GMT

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் மல்லபுரா-கொல்லரஹட்டி அருகே இன்று காலையில், நெடுஞ்சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது, அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. தும்கூரில் இருந்து பெலகாவி நோக்கி சென்றபோது விபத்து ஏபட்டுள்ளது.

இதில் காரின் முன்பகுதி நசுங்கி லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்துள்ளனர்.

கார் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்