கர்நாடகத்தில் கார்கள் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
கர்நாடகத்தில் 2 கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டம், மதுகிரி தாலுகாவில் 2 கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பெங்களூரு ஜே.பி. நகரில் வசிக்கும் யோகேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்டு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள் ஆவர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.