பெண் கொலை வழக்கில் மைத்துனர் கைது; கள்ளத்தொடர்பை கைவிட்டதால் தீர்த்துக்கட்டினார்

உப்பள்ளியில் பெண் கொலை வழக்கில் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளத்தொடர்பை கைவிட்டதால் தீர்த்துக்கட்டினார்.

Update: 2022-09-11 14:48 GMT

உப்பள்ளி;

கள்ளத்தொடர்பு

தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா யாரிநாராயணபுராவை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி சுனந்தா (வயது 38). இந்த நிலையில் சுனந்தாவுக்கும், மஞ்சுநாத்தின் சகோதரர் மகாந்தேஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களின் கள்ளக்காதல் வெளியே தெரியவந்ததும் அவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

பின்னர் சுனந்தாவும், மகாந்தேசும் கல்கட்டகியில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுனந்தா, மைத்துனர் மகாந்தேசை பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தகராறு

இதையடுத்து சுனந்தாவின் பெற்றோர், மஞ்சுநாத்தை சமாதானம் செய்து அவருடன் சேர்ந்து வாழும்படி சுனந்தாவுக்கு புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து சுனந்தா தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மகாந்தேஷ் யாரிநாராயணபுரா கிராமத்துக்கு வந்தார்.

தனது அண்ணன் வீட்டுக்கு சென்ற அவர், அண்ணி சுனந்தாவை தன்னுடன் வரும்படி அழைத்துள்ளார். ஆனால் மகாந்தேசுடன் செல்ல மறுத்த சுனந்தா, கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்துள்ளார். மேலும் அவரை அங்கிருந்து செல்லும்படி விரட்டியும் அடித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

கழுத்தை அறுத்து கொலை

அப்போது ஆத்திரமடைந்த மகாந்தேஷ், சுனந்தாவை நடுரோட்டில் இழுத்து போட்டு தாக்கி உள்ளார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் சுனந்தாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் சுனந்தா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மகாந்தேஷ் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் குந்துகோல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான சுனந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளத்தொடர்பை கைவிட்டதால் சுனந்தாவை அவரது மைத்துனர் மகாந்தேஷ் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.

கைது

இதுகுறித்து குந்துகோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மகாந்தேசை ேநற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்