பிரசாரத்திற்கு சிறுவர்-சிறுமிகளை

அழைத்து வர குழந்தைகள் ஆணையம் எதிர்ப்பு

Update: 2023-03-28 21:37 GMT

கர்நாடக சட்டசபை பொதுத்தேர்தலையொட்டி அறிவிக்கப்படாத பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்கள் நடத்தி மக்களிடம் ஆதரவை திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் உள்பட அனைத்து பிரசார நிகழ்வுகளுக்கும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகள் அழைத்து வரப்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையத்துக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது. அது என்னவென்றால், 'கட்சிகள் சார்பில் நடத்தப்படும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என பிரசாரம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளுக்கும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகள் அழைத்து வரப்படுகிறார்கள். இது தவறு. பகிரங்க பிரசாரம் அறிவிக்கப்படாத நிலையில் சிறுவர்-சிறுமிகளுக்கு ஆசைகாட்டி இவ்வாறு அழைத்து வந்து அவர்களை அலைக்கழிப்பது சரியல்ல. அதனால் சிறுவர்-சிறுமிகளை பிரசார நிகழ்வுகளில் ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும். இதுபற்றி தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஒரு கடிதத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு, கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்