போலீசை பார்த்து பயந்து அழுத சிறுவன்... கதை சொல்லி சமாதானம் செய்த எஸ்.ஐ.

சிறுவனுக்கு போலீஸ் மீது இருந்த பயத்தை கேரள எஸ்.ஐ. போக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-10-20 13:32 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள காஞ்சிரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அனில்குமார் மற்றும் நயனா தம்பதியின் 3 வயது மகன் தேவ்ஜித். இவர்களின் பக்கத்தில் வீட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக போலீசார் வந்து சென்றுள்ளனர்.

அவர்களைப் பார்த்து அழத்தொடங்கிய தேவ்ஜித், போலீசார் சென்ற பிறகும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளான். இது குறித்து அப்பகுதிக்கு வந்து சென்ற போலீசார் மூலம் தெரிந்து கொண்ட எஸ்.ஐ. அருண், சிறுவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரச்செய்துள்ளார்.

பின்னர் சிறுவன் தேவ்ஜித்தை தூக்கி மடியில் அமர வைத்து, சுமார் 1 மணி நேரம் கதை சொல்லியும், விளையாட்டு காட்டியும் அவனை சமாதானப்படுத்தினார். மேலும் சிறுவனுக்குப் பிடித்த இனிப்பு வகைகளை வாங்கிக் கொடுத்து, தேவ்ஜித்துக்கு போலீஸ் மீது இருந்த பயத்தைப் போக்கினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்