இந்தியாவும் அமெரிக்காவும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த விரும்புகின்றன: மந்திரி பியூஷ் கோயல்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளோடு இணைந்து செயலாற்றுவது புதிய வரலாற்றிற்கான பாதையை உருவாக்கும் என்றார்.

Update: 2022-09-10 13:28 GMT

லாஸ் ஏஞ்சல்ஸ்,

இந்திய- அமெரிக்க கூட்டுமுயற்சி மாநாடு மற்றும் இந்தோ- பசிபிக் பொருளாதார திட்டங்களுக்கான மந்திரிகள் அளவிலான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மந்திரி பியூஷ் கோயல் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார்.

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அமெரிக்க-இந்திய ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல்,

"இந்தியாவும், அமெரிக்காவும் பொருளாதார மற்றும் ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை வலுப்படுத்த விரும்புகின்றன.இந்தியா தற்போது பல்வேறு வெளிநாடுகளுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுகிறது.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா போன்ற நாடுகளோடு இணைந்து செயலாற்றுவது புதிய வரலாற்றிற்கான பாதையை உருவாக்கும்.

அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கும் போது, இந்தியா ஒரு வலிமையான, வளர்ந்த நாடாக உருப்பெற்றிருக்கும் என்ற நமது பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு இது போன்ற நட்பு நாடுகளுடனான தொடர்புகள் முக்கிய பங்காற்றும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்