எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
குவாலியரில் இருந்து உத்தரபிரதேசம் வழியாக பீகாருக்கு சென்ற குவாலியர்-பாரவுனி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரெயில்வே போலீசாருக்கு போன் வந்தது.
லக்னோ,
மத்தியபிரதேசத்தின் குவாலியரில் இருந்து உத்தரபிரதேசம் வழியாக பீகாருக்கு குவாலியர்-பாரவுனி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. உத்தரபிரதேசம் அருகே அந்த ரெயில் வந்து கொண்டிருந்தபோது ரெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் குண்டு வெடிக்கும் என ரெயில்வே போலீசாருக்கு போன் வந்தது.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ரெயில்வே போலீசார், மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பாரபங்கி ரெயில் நிலையம் அருகே ரெயில் நிறுத்தப்பட்டது. மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனையிட்டனர். பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதித்தனர்.
இதில் ரெயிலில் வெடிகுண்டு ஏதும் இல்லை என தெரிய வந்தது. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. இதனையடுத்து அந்த ரெயில் 50 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.