உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா படுதோல்வி அடையும் - ராகுல்காந்தி பேச்சு
உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் தொகுதியில் ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னோஜ் தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;
"இந்தியா கூட்டணிப் புயல் உத்தரப் பிரதேசத்துக்கும் வந்துவிட்டது. மாநிலத்தில் மிக மோசமான தோல்வியை பா.ஜனதா கட்சி சந்திக்கப் போகிறது. நாடு முழுவதும் பா.ஜனதாவின் தோல்விக்கு உத்தரபிரதேசம்தான் வழிகாட்டப் போகிறது.
தோல்வியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அம்பானி, அதானியிடம் பிரதமர் மோடி மன்றாடுகிறார். அடுத்த 15 நாட்களுக்கு உங்கள் கவனத்தை திசைதிருப்ப பிரதமர் மோடியும் அமித்ஷாவும் முயற்சிப்பார்கள். எச்சரிக்கையுடன் இருங்கள்." இவ்வாறு அவர் பேசினார்.