ராகுல் காந்தி அணிந்து இருக்கும் டி-ஷர்ட் விலை எவ்வளவு தெரியுமா? பாஜக விமர்சனம்

பாரத் ஜோடா யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி ரூ 41 ஆயிரம் மதிப்புள்ள டிஷர்ட் அணிந்து இருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.

Update: 2022-09-09 11:37 GMT

புதுடெல்லி,

பாரத் ஜோடா யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி ரூ 41 ஆயிரம் மதிப்புள்ள டிஷர்ட் அணிந்து இருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது. பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளது. முதல் புகைப்படத்தில் ராகுல் காந்தியின் புகைப்படம். மற்றொன்று அவர் அணிந்திருந்ததுபோன்ற ஒரு டி-ஷர்ட்டின் விலையை குறிக்கும் படம். அந்த படத்தில் பர்பரி டி-ஷர்ட்டின் விலை ரூ.41.257 என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு பாரதம் பார்க்கட்டும் என்ற வார்த்தையையும் பாஜக பதிவிட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், பிரதமர் மோடி ரூ 10 லட்சம் மதிப்புள்ள கோர்ட் அணிந்து இருந்ததாக விமர்சித்துள்ளது. மேலும், பாரத் ஜோடா யாத்திரையில் திரளும் கூட்டத்தை பார்த்து பயந்து வீட்டீர்களா? பிரச்சினைகளை பற்றி பேசுங்கள்.. வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் குறித்து பேசுங்கள். ஆடைகள் குறித்து நாம் விவாதிக்க வேண்டும் என்றால், பிரதமர் மோடி 10 கோடி மதிப்புள்ள சூட் மற்றும் 1.5 லட்சம் பதிப்புள்ள கண்ணாடி அணிந்து இருந்தது பற்றியும் பேசப்படும்" என்று தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்