வழக்குகளை ரத்து செய்கிறோம், எங்கள் கட்சியில் சேருங்கள் என பாஜக தூது: மணிஷ் சிசோடியா பரபரப்பு டுவிட்

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தால் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று பாஜக தூது அனுப்பியுள்ளதாக டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

Update: 2022-08-22 07:46 GMT

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தால் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று பாஜக தூது அனுப்பியுள்ளதாக டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

இது தொடர்பாக மணிஷ் சிசோடியா தனது டுவிட் பதிவில், "எனக்கு பாஜகவிடம் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது. ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவின் இணைந்துவிடுங்கள். அப்படிச் செய்தால் சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகள் முடித்துவைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு என்னுடைய பதில் என்னவென்றால், நான் ஒரு ரஜபுத்திரன். என் தலையை துண்டித்தாலும் கூட யாருக்கும் அஞ்சமாட்டேன். சதிகாரர்கள் முன் தலைகுனிய மாட்டேன். ஊழல்வாதிகளுக்கு அடிபணிய மாட்டேன். என் மீதான வழக்குகள் அனைத்தும் போலியானவை. நீங்கள் என்ன செய்யவேண்டுமோ செய்து கொள்ளுங்கள்" என்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்