பா.ஜனதா மாநில தலைவர் பதவி கொடுத்தால் நிர்வகிக்க தயார்- முன்னாள் மந்திரி சோமண்ணா பரபரப்பு பேட்டி

நான் சன்னியாசி அல்ல, எனக்கும் ஆசை இருக்கிறது என்றும், பா.ஜனதா மாநில தலைவர் பதவி கொடுத்தால் நிர்வகிக்க தயாராக இருக்கிறேன் என்று முன்னாள் மந்திரி சோமண்ணா தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-25 18:45 GMT

மல்லேசுவரம்:-

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் மந்திரி சோமண்ணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தேர்தலில் கிளீன் போல்டு

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போர், சிக்ஸ் அடிக்க முயன்ற கிளீன் போல்டு ஆகி இருந்தேன். நான், கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பதவியை கொடுக்கும்படி கட்சி தலைமையிடம் கேட்டு வருகிறேன். மாநில தலைவர் பதவியை எனக்கு வழங்க வேண்டும் என்ற முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை. எனக்கும் ஆசை இருக்கிறது. நான் ஒன்றும் சன்னியாசி அல்ல.

என்னால் வீட்டில் சும்மா இருக்க முடியாது. மாநில தலைவர் பதவி வழங்கினால், அதனை திறம்படி நிர்வகிக்க தயாராக இருக்கிறேன். இந்த

விவகாரத்தில் பா.ஜனதா தலைமை எந்த முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மாநில தலைவர் பதவி யாருக்கு வழங்க வேண்டும் என்பதில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். கட்சி எந்த பணி கொடுத்தாலும் அதனை திறம்பட செய்யவும் தயாராக உள்ளேன்.

என்னை புத்திசாலி இருந்தால்...

எனக்கு எந்த பதவியும், பணிகளும் கொடுக்காவிட்டாலும், கவலைப்பட மாட்டேன். என்னால் முடிந்த அளவுக்கு கட்சி பணிகளை தொடர்ந்து செய்வேன். 45 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் சும்மா இருந்தது கிடையாது. எனக்கு மாநில தலைவர் பதவி கொடுப்பதா?, வேண்டாமா? என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். தலைவர் பதவி கொடுத்தால் நானும் தூங்க மாட்டேன், மற்றவர்களையும் தூங்க விட மாட்டேன். என்னை விட புத்திசாலி ஆனவர்கள் இருந்தால் அவர்களுக்கு மாநில தலைவர் பதவியை கட்சி தலைமை கொடுக்கட்டும்.

தற்போது மாநில தலைவராக இருக்கும் நளின்குமார் கட்டீல் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று கூறி இருக்கிறார். அதே நேரத்தில் அவர் தலைவர் பதவியில் இருந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்த்திருக்கிறார். அவரது தலைமையில் கட்சி நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

இவ்வாறு சோமண்ணா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்