பீகார்: மத்திய மந்திரியின் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்தது; 5 போலீசார் காயம்

பீகாரில் மத்திய இணை மந்திரி அஷ்வினி சவுபேவின் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனம் கவிழ்ந்ததில் 5 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

Update: 2023-01-16 05:45 GMT



பாட்னா,


பீகாரின் பாட்னா நகரில் மத்திய இணை மந்திரி அஷ்வினி சவுபேவின் பாதுகாப்புக்காக சென்று கொண்டிருந்த அணிவகுப்பு வாகனங்களில் ஒன்று மதிலா மற்றும் நாராயணப்பூர் பகுதியருகே நேற்றிரவு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் மத்திய மந்திரிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்தில் சிக்கிய வாகனத்தில் பயணித்த 5 போலீசார் காயம் அடைந்துள்ளனர். இதுபற்றி மந்திரி சவுபே டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நாங்கள் பக்சார் நகரில் இருந்து பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தோம்.

எங்களது பாதுகாப்புக்காக கொர்னசாராய் காவல் நிலையத்தில் இருந்து வந்த அணிவகுப்பு வாகனம் ஒன்று கால்வாய் பகுதிக்குள் கவிழ்ந்தது. அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். பகவான் ஸ்ரீராமருக்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கிய போலீசாரை மத்திய மந்திரியின் பாதுகாப்புக்கு வந்த பிற போலீசார் மீட்டு அருகிலுள்ள தம்ராவ் சதார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்