பீகார்: கங்கை ஆற்றில் உடைந்து விழுந்த பாலம்- விசாரணைக்கு உத்தரவிட்ட பீகார் முதல் மந்திரி

தரமற்ற வகையில் பாலம் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.

Update: 2023-06-04 16:27 GMT

பாட்னா,

பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் பாலம் கட்டப்படுகிறது. கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பாலத்தின் இரண்டு பகுதிகள் இன்று  திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தன. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்து ஏற்பட்டபோது யாராவது வேலை செய்துகொண்டிருந்தார்களா? என தெரியவில்லை.இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். தரமற்ற வகையில் பாலம் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்