பெங்களூரு - மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தார்.
பெங்களூரு,
பிரதமர் மோடி இன்று(சனிக்கிழமை) கர்நாடகம் வருகை தந்துள்ளார் . தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து . அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்றார்
அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பிறகு அவர் பெங்களூரு வந்த பிரதமர் மோடி , கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் . அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தார்.