பெங்களூருவையும் மரங்களையும் பிரித்து பார்க்க முடியாது

இயற்கையோடு ஒன்றிப்போன நகரம் என்றும், பெங்களூருவையும் மரங்களையும் பிரித்து பார்க்க முடியாது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

Update: 2023-04-01 21:47 GMT

பெங்களூரு:-

பெங்களூருவுக்கு புகழாரம்

கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே பிரதமர் மோடி 7 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்து பல ஆயிரம் கோடி வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்திருந்தார். சட்டசபை தேர்தலுக்காக பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகத்திற்கு வருவதாக எதிர்க்கட்சிகளும் குற்றச்சாட்டு கூறி இருந்தனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று பெங்களூரு நகருக்கு புகழாரம் சூட்டி டுவிட்டர் பதிவு வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:

இயற்கையோடு ஒன்றிப்போன நகரம்

பெங்களூரு நகரையும், மரங்களையும் பிரிக்க முடியாத விஷயமாகவே பார்க்கப்படுகிறது. பெங்களூருவையும், மரங்களையும் பிரித்து பார்க்க முடியாது. பெங்களூரு நகரம் மரங்களாலும், ஏரி, குளங்களாலும் இயற்கையோடு ஒன்றிப்போன நரகரமாக உள்ளது. இதுபோல், தங்கள் நகரங்களும், ஊர்களும் இயற்கையோடு ஒன்றி இருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஊர்களும் மரங்களுடன், இயற்கையோடு ஒன்றிப்போய் இருக்க வேண்டும். இதுபோல், மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வர தங்கள் ஒவ்வொருவரையும் விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்