அரசு தொழில்நுட்ப கல்வி தேர்வு வாரியத்திற்கு தன்னாட்சி அதிகாரம்

அரசு தொழில்நுட்ப கல்வி தேர்வு வாரியத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் என்று மந்திரி அஸ்வத் நாராயணா தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-02 19:34 GMT

பெங்களூரு-

பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் எஸ்.ஜே.பாலிடெக்னிக் கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-

கர்நாடகத்தில் முதல் முறையாக பாலிடெக்னிக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடக்கிறது. கர்நாடகத்தில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. வெளிநாடுகளை சேர்ந்த தனியார் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதன் தரம் உயர்த்தப்படுகிறது.

கர்நாடகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இதில் 30 சதவீதம் பேர் மாணவிகள். பாலிடெக்னிக் பாடத்திட்டத்தில் 45 பாடப்பிரிவுகள் உள்ளன. கடந்த ஆண்டு முதல் சைபர் பாதுகாப்பு, சுற்றுலா உள்பட பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு தொழில்நுட்ப கல்வி தேர்வு வாரியத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்