ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; முதியவர் சாவு

உடுப்பி அருகே ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

Update: 2022-10-07 19:00 GMT

மங்களூரு;

 உடுப்பி டவுன் பந்தக்கல் பகுதியை சேர்ந்தவர் சங்கர் கோட்டியன் (வயது 60). இவர் அதே பகுதியில் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் சங்கர், நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த ஆட்டோவும், அவர் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் சங்கர், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிர்வா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்