திருப்பதி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய செல்போன்கள், வாட்ச்கள் 24-ம் தேதி ஏலம்

புதிய, பயன்படுத்திய மற்றும் லேசாக சேதமடைந்த செல்போன்கள், வாட்ச்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும்.

Update: 2024-06-21 14:02 GMT

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள், கோவிலில் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் பணம் மட்டுமின்றி, தங்கம், வெள்ளி போன்ற நகைகளையும் காணிக்கையாக வழங்கி வருகிறார்கள். இது தவிர மின்னணு பொருட்களும் உண்டியலில் காணிக்கையாக போடப்படுகின்றன. இதேபோல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பிற கோவில்களிலும் காணிக்கை செலுத்தப்படுகிறது.

இவ்வாறு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் வாட்ச்கள் வருகிற 24-ம் தேதி ஆன்லைன் மூலம் ஏலம் (e-auction) விடப்படுகின்றன. புதிய, பயன்படுத்திய மற்றும் லேசாக சேதமடைந்த செல்போன்கள், வாட்ச்கள் ஏலத்தில் விடப்படும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மார்க்கெட்டிங் அலுவலகத்தை 0877-2264429 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், தேவஸ்தான இணையதளமான www.tirumala.org அல்லது மாநில அரசு இணையதளமான www.konugolu.ap.gov.in என்ற இணையதளத்தையும் பார்த்து ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்