போலீஸ்காரரை கத்தியால் குத்திய ரவுடி

போலீஸ்காரரை கத்தியால் குத்திய ரவுடியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2022-10-29 18:45 GMT

பெங்களூரு:


பெங்களூரு கிரிநகர் பகுதியில் வசித்து வருபவர் விஜய் என்கிற கோனே விஜய். இவர் ரவுடி ஆவார். இந்த நிலையில் ஒசகெரேஹள்ளி பகுதியில் உள்ள பஸ் நிலையம் முன்பு கிரிநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர்களான நாகேந்திரா, கிரண் மற்றும் பெண் போலீசான நேத்ரா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன பதிவெண் இல்லாத ஒரு ஸ்கூட்டரில் விஜய் வந்தார். இதனால் அவரிடம் போலீசார் விசாரிக்க முயன்றனர். இந்த சந்தர்ப்பத்தில் நாகேந்திரா, கிரண், நேத்ராவின் கண்களில் மிளகாய் பொடியை விஜய் தூவினார். பின்னர் நாகேந்திராவை கத்தியால் குத்திய விஜய், கிரண், நேத்ராவை தாக்கிவிட்டு தப்பி சென்றார். தற்போது 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கிரிநகர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விஜயை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்