அமர்நாத் குகைக்கோவிலில் இதுவரை 3.70 லட்சம் பக்தர்கள் தரிசனம்

இந்த ஆண்டின் 62 நாள் யாத்திரை, கடந்த 1-ந் தேதி தொடங்கியது. ஆகஸ்டு 31-ந் தேதி முடிவடைகிறது.;

Update:2023-07-28 22:42 IST

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில், பனியால் இயற்கையாக உருவாகும் சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டின் 62 நாள் யாத்திரை, கடந்த 1-ந் தேதி தொடங்கியது. ஆகஸ்டு 31-ந் தேதி முடிவடைகிறது.

9 ஆயிரத்து 150 யாத்ரீகர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து, இதுவரை தரிசனம் செய்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 69 ஆயிரத்து 288 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு யாத்திரை முழுவதும் மொத்தம் 3 லட்சத்து 65 ஆயிரம்பேர் தரிசனம் செய்தனர். தற்போது, ஒரு மாத காலத்துக்குள் அந்த எண்ணிக்கையை தாண்டி விட்டது. பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், இந்தி நடிகை சாரா அலிகான் ஆகியோரும் இந்த ஆண்டு தரிசனம் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்