ஆண் நண்பருடன் ரீல்ஸ் எடுக்கச் சென்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம் - 2 பேர் கைது
ஆண் நண்பருடன் ரீல்ஸ் எடுக்கச் சென்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை தனது ஆண் நண்பருடன் இந்தூரின் புறநகர் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணை 2 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், குற்றவாளிகள் 2 பேரையும் இன்று கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் இளம்பெண்ணின் நண்பருக்கு தெரிந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளதாகவும், அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.