அசாம்; ரெயில் நிலையத்தில் ரூ.1.28 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.43 லட்சம் மதிப்பிலான 24 கேரட் தங்க தூசு மற்றும் 24 கேரட் தங்க நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம் என மும்பை சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2024-02-05 14:57 GMT

கவுகாத்தி,

அசாமில் கவுகாத்தி ரெயில் நிலையத்தில் ரூ.1.28 கோடி மதிப்பிலான 1.997 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம், சுங்க துறை அதிகாரிகளால் இன்று பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவற்றில், 12 தங்க கட்டிகள் மற்றும் 5 நாணயங்களும் அடங்கும்.

கடத்தலில் ஈடுபட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்டவை, அவர் அணிந்திருந்த டிரவுசரின் இடுப்பு பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டு, கடத்தப்பட்டு இருந்தன.

இதற்கு முன், ரூ.43 லட்சம் மதிப்பிலான 24 கேரட் தங்க தூசு மற்றும் 24 கேரட் தங்க நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம் என மும்பை சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை துபாயில் இருந்து மும்பை நோக்கி வந்த இந்தியர் கடத்தி வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் வைத்து நடந்த சோதனையில் அவை பறிமுதல் செய்யப்பட்டன.

சாக்லேட் பெட்டிகள் மற்றும் குழந்தைகளுக்கான பவுடர் அடங்கிய பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு அவை கடத்தப்பட்டு இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்