அசாமில் குழந்தை திருமணத்துக்கு எதிராக 4-வது நாளாக அதிரடி நடவடிக்கை: இதுவரை 2,441 பேர் கைது

அசாமில் குழந்தை திருமணத்துக்கு எதிரான அதிரடி நடவடிக்கையாக இதுவரை 2,441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-02-06 20:20 GMT

கவுகாத்தி,

அசாமில் அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி இந்த திருமணங்களை அதிரடியாக தடுப்பது, குற்றவாளிகளை கைது செய்வது, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை கடந்த 3-ந்தேதி தொடங்கியது.

இதில் குழந்தை திருமணம் தொடர்பாக 1,800-க்கு மேற்பட்டோர் முதல் நாளில் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை நேற்று 4-வது நாளாக தொடர்ந்தது. மாநிலம் முழுவதும் இதுவரை 4,074 வழக்குகள் பதிவாகி உள்ளன. அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 2,441 ஆக அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்து உள்ளன. குறிப்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதேநேரம் இந்த அதிரடி நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்