பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை பிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா உயிரிழப்பு
பிரதமரை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்புப் படை (SPG) பிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.;
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு பொறுப்பான சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG) பிரிவின் இயக்குநர் அருண்குமார் சின்ஹா (வயது 61) உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.
1988ஆம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக முதன்முதலில் தனது பணியை தொடங்கிய சின்ஹாவுக்கு சமீபத்தில் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்தியப் பிரதமர், முன்னாள் பிரதமர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முழு பாதுகாப்பையும் வழங்கும் பணி எஸ்.பி.ஜி யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமரின் அலுவலகம், குடியிருப்பு, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுப்பயணங்களின் போது எஸ்.பி.ஜி பாதுகாப்பை வழங்கி வருகிறது. நாட்டில் நிலவும் பாதுகாப்பற்றசூழல் மற்றும் பயங்கரவாதத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, எஸ்.பி.ஜி குழு தங்களது பாதுகாப்பை நவீனமயமாக்கி, மேம்படுத்தும். அதுவே அவர்களது முக்கிய பணியாகும்.