வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது

குடிபண்டேவில், வீடு புகுந்து ரூ.5.10 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-09 22:02 GMT

கோலார் தங்கவயல்:

குடிபண்டேவில், வீடு புகுந்து ரூ.5.10 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீடு புகுந்து திருட்டு

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா கடேஹள்ளி கிராஸ் பகுதியை சேர்ந்தவர் நரேந்திரா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடிபண்டேவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் ரவீந்திரா வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. அதில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம், ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகை ஆகியவை திருடுபோய் இருந்தது. அதுகுறித்து நரேந்திரா குடிபண்டே புறநகர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் நரேந்திரா வீட்டில் திருடியது தெரியவந்தது.

மேலும் பிடிப்பட்டவர்கள் கவுரிபித்தனூர் தாலுகா ஒசூரில் உள்ள ஈடிகெரேபேட்டையை சேர்ந்த சீனிவாஸ்(வயது 20), இந்துப்பூர் தாலுகா, சவுலூரை சேர்ந்த மகேஷ்(30) மற்றும் மஞ்சுநாத்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது. 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்