டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

குஜராத் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை கனமழையால் இடிந்து விழுந்தது.;

Update:2024-06-29 15:40 IST

காந்திநகர்,

வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் கனமழை காரணமாக நேற்று டெல்லி விமான நிலையத்தின் டெர்மினர் 1 மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

இந்த சோகம் நீங்காத நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை கனமழையால் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்திற்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்