விவேகானந்தர் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்தினார்: ஜனாதிபதி முர்மு
விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி இந்திய மக்களுக்கு ஒரு புதிய தன்மையை கொண்டுவந்தவர் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.;
புதுடெல்லி
சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 12 ஆம் தேதி) தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி இந்திய மக்களுக்கு ஒரு புதிய தன்மையை கொண்டுவந்தவர் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது;
விவேகானந்தரின் பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைச் செலுத்துகிறேன். இந்தியாவின் மகத்தான ஆன்மிகச் செய்தியை மேற்கத்திய உலகிற்கு எடுத்துச் சென்றார். இந்திய மக்களிடையே அவர் ஒரு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார். இளைஞர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தவும், தேசத்தைக் கட்டியெழுப்பவும், மனிதகுலத்திற்கு சேவை செய்யவும் அவர் ஊக்கமளித்தார். அவரது மரபு உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது