தோல்வி பயத்தில் பா.ஜ.க. உள்ளது: கெஜ்ரிவால் தாக்கு

பா.ஜ.க. தோல்வி பயத்தில் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது என ஆம் ஆத்மி நிறுவனர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.;

Update:2025-01-12 08:45 IST

புதுடெல்லி,

டெல்லியில் 70 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கியது. 17-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 18-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 20-ந்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். வாக்கு பதிவு பிப்ரவரி 5-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதியும் நடைபெறும்.

இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், ஆம் ஆத்மி நிறுவனரான கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறும்போது, பா.ஜ.க. தோல்வி பயத்தில் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது என கூறியுள்ளார்.

அதனுடன், மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்ட தெற்கு டெல்லியின் முன்னாள் எம்.பி.யான ரமேஷ் பிதூரியின் பெயர் பா.ஜ.க.வில் இறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர், முதல்-மந்திரி அதிஷிக்கு எதிராக கல்காஜி தொகுதியில் போட்டியிடுகிறார். அதுவும் முதல்-மந்திரி வேட்பாளராக என்று கூறியுள்ளார். இது பா.ஜ.க. மத்தியில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்