காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரென் சாமி தரிசனம்
காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரென் சாமி தரிசனம் செய்தார்.;
லக்னோ,
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான ஸ்டீவ் ஜாப்ஸ்ம் கடந்த 2011-ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது மனைவி லாரென் பாவெல்(61), ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், லாரென் பாவெல் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அவருடன் நிரஞ்சனி அகாரா ஆசிரமத்தை சேர்ந்த கைலாஷ் ஆனந்த் ஜி மகராஜ் உடன் வந்திருந்தார். லாரென் பாவெல் மேலும் சில நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.