ஒடிசாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் பலி

அம்மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மஜி இரங்கல் தெரிவித்து தீ விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.;

Update:2025-01-12 13:06 IST

புவனேஸ்வர்

ஒடிசாவின் பவுத் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

பவுத் மாவட்டத்தின் சதார் தொகுதியில் உள்ள முண்டிபதர் பஞ்சாயத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு 8 வயது, மற்றொரு சிறுவனுக்கு 5 வயதுதான் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் குளிர்காலம் என்பதால் மாலையில் சிறுவர்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே தீ மூட்டி அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், தீ பரவத் தொடங்கியது, சிறுவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வைக்கோல் குவியலில் தஞ்சம் புகுந்தனர், ஆனால் அதுவும் தீப்பிடித்தது. இதனால் குழந்தைகள் உதவிக்காக அலறுவதைக் கேட்டு மக்கள் திரண்டனர்.

அங்கு வந்த பொது மக்கள் பாதிக்கப்பட்ட 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர்கள் காயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மஜி இரங்கல் தெரிவித்தார். மேலும் தீ விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்