கன்னட நடிகர் அனிருத், சீரியல்களில் நடிக்க 2 ஆண்டுகள் தடை

க்ன்னட நடிகர் அனிருத், சீரியல்களில் நடிக்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-20 21:47 GMT

பெங்களூரு: கன்னட சின்னத்திரை நடிகராக இருப்பவர் அனிருத் ஜட்கர். இவர் பிரபல சின்னத்திரை இயக்குனர் ஆரூர் ஜெகதீஷ் இயக்கத்தில் ஜோதே ஜோதேயாலி என்ற நாடகத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் இயக்குனர், அனிருத் ஜட்கர் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த படப்பிடிப்பின் போது இயக்குனருடன் தகராறு செய்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சீன் பேப்பர் விவகாரம், கேரவன் கேட்டும் அடம்பிடித்ததாகவும் அனிருத் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருவரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது.

இருப்பினும் இருவர் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்ததுடன் நாடக படப்பிடிப்பு தடைப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றது. இந்த புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கம், அனிருத் ஜட்கர் சின்னத்திரை தொடர்களில் 2 ஆண்டுகள் நடிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜோதே ஜோதேயாலி தொடரில் இருந்தும் அவர் நீக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் அனிருத் ஜட்கர், இந்த நடவடிக்கை எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி. எனக்கு அவர்களுடன் எந்த பிரச்சினையும் இல்லை. சீன் பேப்பரை கேட்டேன். ஆனால் கொடுக்கவில்லை. எனக்கு திமிர் இல்லை. எனது ரசிகர்களுக்கு என்னை பற்றி தெரியும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்