கர்ப்பிணி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை; சிக்கமகளூருவில் திருநங்கைகள் போராட்டம்

கர்ப்பிணி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகள் விடுதலையை கண்டித்து சிக்கமகளூருவில் திருநங்கைகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-08-28 15:37 GMT

சிக்கமகளூரு;


குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பில்கீஸ் பானு என்ற கர்ப்பிணி பெண்ணை சிலர் பலாத்காரம் செய்து, அவரின் 3 வயது குழந்தையை கொலை செய்தனர். இந்த வழக்கு விசாரணை குஜராத் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் கர்ப்பழிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குஜராத் அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிக்கமகளூரு ஆசாத் பூங்காவில் திருநங்கைகள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

பில்கீஸ் பானு பலாத்கார வழக்கில் தொடர்புடையவர்களை குஜராத் கோர்ட்டு விடுதலை செய்தது கண்டிக்கத்தக்கது. உடனே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய தண்டணை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பின்னர் இது தொடர்பாக துணை கலெக்டர் ரூபாவிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அவர்கள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்