கதக்கில் விபத்தில் 3 பேர் பலி
கதக்கில் நடந்த விபத்தில் மூன்று பேர் பலியானார்கள்.
கதக்:
கதக் மாவட்டம் அடவிசோமாபூர் கிராமத்தின் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 3 பேரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடந்ததும் கார் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. இதுகுறித்து கதக் புறநகர் போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் சிங்கடராயனகேரியை சேர்ந்த சிவப்ப நாயக் (வயது 50), கிருஷ்ணப்பா (31), சிவானந்தா லமானி (33) என்பது தெரியவந்தது. இதுகுறித்து கதக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.