பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்தபோது லாரி மோதி 9 வயது சிறுமி பலி

பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு அழைத்து வந்தபோது, லாரி-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதில் 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

Update: 2023-06-25 21:39 GMT

பெங்களூரு:

பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு அழைத்து வந்தபோது, லாரி-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதில் 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

தனியார் பள்ளி

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா அடேசொன்னஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேஜஸ்வி ராவ். தொழிலாளி. இவரது மனைவி கவுதமி. இந்த தம்பதிக்கு லட்சுமி பிரியா என்ற 9 வயது மகள் இருந்தாள். அந்த சிறுமி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். தினமும் அவளது தந்தை மோட்டார் சைக்கிளில் வைத்து சிறுமியை பள்ளிக்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் அவர் தனது மகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார்.

அவர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது எதிரே வந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் தறிகெட்டு ஓடி அந்த லாரி, தேஜஸ்வி ராவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் சாலையில் உருண்டது. இந்த விபத்தில் 9 வயது சிறுமி லட்சுமி பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். அவளது தந்தை தேஜஸ்வி ராவ் படுகாயமடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

வழக்குப்பதிவு

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சூர்யாசிட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் வந்தனர். மேலும் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் நடத்திய விசாரணையில் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்