கொழுந்து விட்டு எறிந்த ஏடிஎம்..! - கருகி சாம்பலான பணம்... பரபரப்பு காட்சி
இது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
நெல்லூர்,
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள வனத்தோப்பில் அமைந்துள்ள ஏடிஎம்-மில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஏடிஎம் இயந்திரம் தீப்பற்றி எரிந்த நிலையில், உள்ளே இருந்த லட்சக்கணக்கான பணம் தீயில் கருகி சாம்பலானது.
தகவலறிந்து வந்த வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.