கர்நாடகத்தில் தண்டவாளத்தில் நின்ற லாரி மீது ரெயில் மோதி விபத்து

ரெயிலின் வேகம் வெகுவாக குறைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Update: 2022-07-07 07:45 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பைதர் மாவட்டத்தில் உள்ள பால்கி பகுதியில் ரெயில்வே கிராசிங்கை கடந்து சென்ற லாரி ஒன்று பாதி வழியில் தண்டவாளத்தில் நின்றது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் ஒன்று லாரியின் மீது மோதியது.

தண்டவாளத்தின் மீது லாரி நிற்பதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட இஞ்சின் டிரைவர், ரெயிலின் வேகத்தை வெகுவாக குறைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்