ஓடும் ரெயில் பெண் மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் பணி நீக்கம்

ஓடும் ரெயிலில் பெண் மீது போதை டிக்கெட் பரிசோதகர் சிறுநீர் கழித்த விவகாரத்தில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-03-14 16:09 GMT

லக்னோ,

பஞ்சாப்பின் அம்ரித்சரில் இருந்து மேற்குவங்காளத்தின் கொல்கத்தா நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் அம்ரித்சரை சேர்ந்த ராஜேஷ்குமார் தனது மனைவியுடன் பயணித்தார். இந்நிலையில், நள்ளிரவு ரெயிலில் மதுபோதையில் வந்த பீகாரை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் முன்னா குமார் ரெயில் இருக்கையில் ஆழ்ந்த தூக்கத்தில் தூங்கிகொண்டிருந்த ராஜேஷ்குமாரின் மனைவி மீது திடீரென சிறுநீர் கழித்தார்.

டிக்கெட் பரிசோதகரின் இந்த இழிவான செயலால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் விழித்து மதுபோதையில் பெண் மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை அடித்து உதைத்தனர். பின்னர், உத்தரபிரதேசத்தின் சார்பஹ் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்த உடன் டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை ரெயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் சிறுநீர் கழித்த நபர் பீஹாரைச் சேர்ந்த முன்னாகுமார் என்பதும் டிக்கெட் பரிசோதகர் என்பதும் தெரியவந்தது.இந்த விஷயம் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட கோட்ட ரெயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து அவர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்