போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது அரசு ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் சாவு
போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது அரசு ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் பலியானார்.
கலபுரகி: கலபுரகி டவுன் ஹமல்வாடி பேரங்காடி பகுதியை சேர்ந்தவர் ஷேக் சோகைல் (வயது 30). இவரை கொள்ளை வழக்கில் போலீசார் கைது செய்து இருந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்காக ஷேக்கை கலபுரகி ஜிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து கொண்டு இருந்தது. அப்போது போலீசார் கவனிக்காத நேரத்தில் ஷேக் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடினார்.
மேலும் ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் இருந்து அவர் கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கலபுரகி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.