சாகா் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு
சாகா் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.
சிவமொக்கா;
சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா அனந்தபுரம் அருகே அச்சாபுரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிலாலகுண்டி கிராமத்தில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் நேற்றுமுன்தினம் வாலிபா் ஒருவர் நீச்சல் பழகுவதற்காக சென்று இருந்தார். அப்போது அவர் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.
இ்ந்த நிலையில் அவர் நீரில் தத்தளித்துள்ளார். இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் நீரில் முழ்கி பாிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சாகர் புறநகர் போலீசார் வாலிபரின் உடலை ஏரியில் இருந்து கைப்பற்றி விசாரித்தனர்.
விசாரணையில் அவர் சிக்கமகளூரு டவுன் ஹான்தி கிராமத்தை சேர்ந்த முகமது அமீன் (வயது 19) என்பதும், சாகரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தபோது அந்த சம்பவம் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.