காதலி முன் மற்றொரு காதலர் அடித்த அதிர்ச்சியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

மராட்டியத்தில் தனது காதலியின் முன்னே மற்றொரு காதலர் அடித்த அதிர்ச்சியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Update: 2022-09-17 15:53 GMT


பிம்ப்ரி,


மராட்டியத்தின் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் வசித்து வந்தவர் பிரதீக் சந்தோஷ் கூட்வால். இளம்பெண் ஒருவரை இவர் காதலித்து வந்துள்ளார். அதே பெண்ணை பிரதாமேஷ் மகது பதாரே என்ற மற்றொரு நபரும் காதலித்து உள்ளார்.

இந்த நிலையில், காதலியின் கண் முன்னே சந்தோஷை, மகது அடித்து, தாக்கியுள்ளார். இதனால் சந்தோஷ் அதிர்ச்சி அடைந்து உள்ளார். அவரது மனதும் புண்பட்டு உள்ளது. இதன்பின் கடந்த மே மாதம் 25-ந்தேதி சந்தோஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆனால், அவரது தற்கொலைக்கான காரணம் பற்றி அவருடைய குடும்பத்தினருக்கு தெரியவில்லை.

இதன்பின்னர் சில நாட்களுக்கு முன்பு பிரதீக் சந்தோஷின் தந்தைக்கு உண்மை விவரம் பற்றி தெரிய வந்துள்ளது. உடனடியாக அவர் போசாரி காவல் நிலையத்திற்கு சென்று இதுபற்றி புகார் அளித்து உள்ளார். தற்கொலை செய்ய தூண்டிய குற்றத்திற்காக மகது மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்