ஆயிரக்கணக்கான குடிசைவாசிகளின் வாழ்வில் ஒரு புது தொடக்கம் ஏற்பட்டு உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி, இந்த பகுதியில் வசிக்கும் மற்றவர்களும் விரைவில் புது வீடு கிடைக்கும் வாய்ப்பினை பெறுவார்கள் என பேசியுள்ளார்.

Update: 2022-11-02 12:24 GMT



புதுடெல்லி,


டெல்லியின் கல்காஜி பகுதியில் குடிசை புனரமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட 3,024 பிளாட்டுகளை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், பிரதமர் மோடி பிளாட்டுகளுக்கான சாவிகளை உரிய பயனாளிகளிடம் வழங்கினார்.

அதன்பின்பு அவர் பேசும்போது, ஆயிரக்கணக்கான குடிசைவாசிகளுக்கு இன்றைய நாள் ஒரு மிக பெரிய நாள். அவர்களின் வாழ்வில் ஒரு புது தொடக்கம் ஏற்பட்டு உள்ளது. தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு சாவிகளை நான் வழங்கியதும், அவர்களது முகத்தில் மகிழ்ச்சியை என்னால் காண முடிந்தது.

கல்காஜி விரிவாக்கத்தின் முதல் கட்டத்தின்படி, 3 ஆயிரத்திற்கும் கூடுதலான வீடுகள் இதுவரை கட்டப்பட்டு இருக்கின்றன. இந்த பகுதியில் வசிக்கும் மற்றவர்களும் விரைவில் புது வீடு கிடைக்கும் வாய்ப்பினை பெறுவார்கள்.

டெல்லியை ஒரு சிறந்த நகராக உருவாக்குவதில் மத்திய அரசின் இந்த முயற்சிகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் வறுமையில் வாடும் குடும்பங்கள் மீதும் கூட, எங்களுடைய அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அதனால், அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கும் வளர்ச்சியை கொண்டு செல்லும் நோக்குடன், வங்கி கணக்கு வசதி இல்லாத அனைவருக்கும் நிதி கிடைக்க செய்யும்படி உறுதி செய்யப்பட்டு உள்ளது. சமூகத்தின் வங்கி கணக்கில்லாத மற்றும் காப்பீடு இல்லாத அனைவரையும் நம்முடைய அரசு சேர்த்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்