கார் மோதி விவசாயி பலி; 2 மாடுகள் செத்தன

அஜ்ஜாம்புரா அருகே கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார். மேலும் 2 மாடுகளும் செத்தன.

Update: 2022-10-17 18:45 GMT

 சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா ராமகிரி அருகே உள்ள சிவனி கிராமத்தை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 28). விவசாயியான அவர் சொந்தமாக மாடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது 2 எருமை மாடுகளை அதே பகுதியில் உள்ள சாலையோரம் மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது ராமகிரியில் இருந்து அஜ்ஜாம்புரா நோக்கி கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கார் திடீரென மாடு மேய்த்து கொண்டிருந்த முருகேஷ் மீது மோதி விட்டு பின்னா் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மீது மோதியுள்ளது.

இதில் முருகேஷ் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் எருமை மாடுகளும் சம்பவ இடத்திலேயே செத்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அஜ்ஜாம்புரா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் செத்த மாடுகளை எடுத்து அருகில் உள்ள வனப்பகுதியில் புதைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்