டெல்லியில் மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் டிரோன் விழுந்ததால் பரபரப்பு
டெல்லியில் மெட்ரோ ரெயில்நிலைய தண்டவாளத்தில் இன்று பிற்பகல் டிரோன் ஒன்று விழுந்து கிடந்தது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள ஜசோலா விஹார் மெட்ரோ ரெயில்நிலைய தண்டவாளத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் டிரோன் ஒன்று விழுந்து கிடந்தது. இதனால் அந்தப் பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனே வந்த போலீசார் டிரோனை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் மருந்து பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், தனியார் நிறுவனம் ஒன்று மருந்து பொருட்களை அனுப்பி வைத்ததை கண்டுபிடித்த போலீசார், அது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இந்தப் பரபரப்பால் ஜசோலா விஹார் ரெயில் நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டிருந்தது. அதன்பின், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது.