'அக்னிபத்' திட்டத்தில் கடற்படை பணிக்கு 9½ லட்சம் பேர் விண்ணப்பம் 82 ஆயிரம் பெண்களும் போட்டி

இந்திய விமானப்படையில், சுமார் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.;

Update:2022-08-04 02:37 IST

புதுடெல்லி,

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கு 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய 'அக்னிபத்' திட்டம் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. வடமாநிலங்களில் போராட்டங்கள் நடந்தபோதிலும், இதை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

இந்திய விமானப்படையில், சுமார் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்கும் பணி ஜூலை 1-ந் தேதி தொடங்கியது. சமீபத்தில் முடிவடைந்தது.

3 ஆயிரம் பணியிடங்களுக்கு சுமார் 9 லட்சத்து 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக கடற்படை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். விண்ணப்பித்தவர்களில் 82 ஆயிரத்து 200 பேர் பெண்கள் ஆவர்.

Tags:    

மேலும் செய்திகள்