மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,115 பேருக்கு பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,115 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள நேற்று முன் தினம் மாநிலத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் நோய் தடுப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் இன்று மாநிலத்தில் புதிதாக 1,115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 788 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், திங்களன்று பாதிப்பு குறைந்து இருந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் பாதிப்பு அதிகரித்து ஆயிரத்தை தாண்டி உள்ளது. 9 பேர் தொற்றால் உயிரிழந்தனர். 5,421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குப் பிறகு ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகபட்ச எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.