கர்நாடகத்தில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்; மாநில அரசு உத்தரவு

கர்நாடகத்தில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளனர்.

Update: 2023-07-10 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக அரசு நேற்று ஒரே நாளில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி சுகாதாரத்துறையின் ஆயுஸ் பிரிவு கமிஷனர் மஞ்சுநாத், நில அளவீடு மற்றும் நில ஆவணங்கள் துறை கமிஷனராகவும், சிறு-குறு தொழில்துறை இயக்குனர் சத்யபாமா ஹாசன் மாவட்ட கலெக்டராகவும், கிராம வளர்ச்சித்துறை கமிஷனர் ஷில்பா சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாகல்கோட்டை மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி பூபாலன் விஜயாப்புரா மாவட்ட கலெக்டராகவும், துமகூரு மாநகராட்சி கமிஷனர் தர்ஷன் தகவல்-உயிரி தொழில்நுட்பத்துறை இயக்குனராகவும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனுராதா பெங்களூரு புறநகர் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக நகர உள்கட்டமைப்புத்துறை இணை நிர்வாக இயக்குனர் பத்மா பசவந்தப்பா கோலார் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரியாகவும், பெங்களூரு புறநகர் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி வரநித் நேகி குடகு மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்